26th October 2021

மயிலாடுதுறை: நமசிவாயபுரம் பழவாற்றில் குளிக்க சென்ற போது 13 வயது சிறுமி மாயமானார்; தீவிர தேடுதலில் தீயணைப்பு வீரர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம், நமச்சிவாயபுரம் ஊராட்சி, கல்யாணச் சோழபுரம் கிராமத்தில் பழவாற்றில் குளிக்க சென்ற போது மாயமான சிறுமியை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நமசிவாயபுரம், கல்யாணச் சோழபுரம், அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன். திருமங்கலம் அரசு பள்ளியில் படித்து வரும் இவரது மகள் ரட்சிதா வயது 13. நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் அவரது தம்பி சக்திவேல் மற்றும் சிறார்களுடன் அப்பகுதியில் ஓடும் பழவாற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் குளிக்கும் போது ஆழத்துக்கு சென்ற ரட்சிதா நீரில் மூழ்கி மாயமானார்.

இது குறித்து தகவல் அறிந்த மணல்மேடு தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமை தீயணைப்பு வீரர் சுரேஷ் தலைமையில் சென்ற தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இரவு 7 மணி வரை தேடியும் சிறுமி கிடைக்காததால் நேரம் ஆகிவிட்டதால் மீண்டும் காலை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page