மலைகிராம மக்களுக்கு மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை நிவாரண உதவி !

வேலூர் மாவட்டம் ஆவலரங்கப்பள்ளி மலை கிராம மக்களுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவும், மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளையும் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கின.

வறட்சி, வேலைவாய்ப்பின்மை, வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நகரத்துடன் துண்டிக்கப்பட்டு கிடக்கும் மலையடிவார கிராமமான ஆவலரங்கப்பள்ளி மக்களுக்கு அந்த பகுதியின் காவல் ஆய்வாளர் இலக்குவன் பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை “அன்பு அறக்கட்டளை நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் அந்த பகுதியில் முகாமிட்டு, சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கினார். மேலும் வேலூர் மாவட்ட காவல்துறை நக்சல் சிறப்பு பிரிவும் அன்பு அறக்கட்டளையும் இணைந்து, அந்த பகுதியினருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடவும் வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளையும் செய்து தருவதாக கூறியிருக்கின்றன. இந்த நிகழ்வில் லோக் ஜனசக்தி நிர்வாகி அகமது தக்கியூதீன், அன்பு அறக்கட்டளையை சேர்ந்த ரஞ்சித்குமார், மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

You cannot copy content of this page