மயிலாடுதுறை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் பணியிடங்களுக்கு நியமன அறிவிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்கீழ் செயல்படும்
பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 175 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 114 சமையலர்
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான “பெண்கள் மட்டும்” தொடர்புடைய வட்டார வளர்ச்சி
அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நடைபெறும் நேரடி நேர்முக தேர்வில் கலந்துகொள்ள
அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பத்தினை உரிய
படிவத்தில் பூர்த்தி செய்து வேலைக்கோரும் பள்ளியின் பெயரை தெளிவாக குறிப்பிட்டு (ஏதாவது ஒரு மையம்
என்று குறிப்பிடக்கூடாது) 24.09.2020 முதல் 30.09.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் தொடர்புடைய வட்டார
வளர்ச்சி அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முக தேர்வு
12.10.2020 அன்று நடைபெறும். அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மற்றும் நகராட்சி
அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக விளம்பர பலகைகளிலும் அமைப்பாளர் / சமையலர்
காலிப்பணியிட விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

அமைப்பாளர் பணிக்கான தகுதிகள்- 1.கல்வித் தகுதி: 1. பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்
பிரிவினர்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ம் வகுப்பு தேர்ச்சி / தேர்ச்சி
பெறாதவராக ,ருக்க வேண்டும். 2.வயது: (1). பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும ; 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க
வேண்டும். (2). பழங்குடியினருக்கு நேர்முக தேர்வு நடைபெறும் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தும், 40
வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். (3). விதைவகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர்
ஆகியோருக்கு நேர்முக தேர்வு நடைபெறும் தேதி அன்று 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதிற்கு
மிகாதவராகவும் இருக்க வேண்டும். (4). உடல் ஊனமுற்றோராக இருப்பின் அந்தந்த இனத்திற்கு மேற்குறிப்பிட்ட
குறைந்தபட்ச வயது பூர்த்தி அடைந்தும் 43 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

சமையலர் பணிக்கான தகுதிகள்- 1.கல்வித் தகுதி: பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்
பிரிவினர்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி / தேர்ச்சி பெறாதவராக இருக்க வேண்டும். பழங்குடியினர் எழுத படிக்க
தெரிந்திருக்க வேண்டும். 2.வயது: (1). பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு நேர்முக
தேர்வு நடைபெறும் தேதி அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் ,இருக்க
வேண்டும். (2). பழங்குடியினருக்கு நேர்முக தேர்வு நடைபெறும் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தும், 40
வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும் (3). விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர்
ஆகியோருக்கு நேர்முக தேர்வு நடைபெறும் தேதி அன்று 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதிற்கு
மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

தூரம்: (ஏ). அனைத்து வகை காலிப்பணியிடத்திற்கும், விண்ணப்பதாரரின் குடியிருப்பிறக்கும் இடையில் உள்ள
தூரம் 3 கி.மீ.-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் கல்வித்தகுதிச்சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, உடல்
ஊனமுற்றோருக்கான சான்று, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோராக ,இருப்பின் அதற்கான சான்று,
வயது சான்றுக்கான ஆதாரம், வருமானச் சான்று ஆகிய சான்று நகல்களுடன் விண்ணப்பங்களை தொடர்புடைய
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்ப படிவம், காலிப்பணியிடம் மற்றும் ,இனசுழற்சி விபரங்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி
அலுவலக தகவல் பலகை, நகராட்சி அலுவலக தகவல் பலகையில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர் மூலமாக
நேர்காணல் அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.பிரவீன் பி நாயர்.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page