26th October 2021

மயிலாடுதுறை: வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம்!

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை தரங்கம்பாடி ரேணுகாதேவி மண்டபத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் வங்கக்கடல் கரையோர மீனவ கிராமங்களான தரங்கம்பாடி, சின்னங்குடி, சின்னமேடு, சின்னுபேட்டை, குட்டியாண்டியூர், தாழம்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பஞ்சாயத்தார் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கடலோர பாதுகாப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது.

மீனவர்களின் நலவாரிய அட்டைகள், வாக்கி டாக்கி, படகுகளுக்கான உரிமம் கட்டணம் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பஞ்சாயத்தார்கள் முன் வைத்தனர். மீனவ பஞ்சாயத்துக்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி இயக்குனர் சண்முகம் கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் மீனவர் நலத்துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் கடலோரம் அமலாக்க துறை செல்வி வெர்ஜீனியா, சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன், மீன்வளத்துறை சார் அலுவலர் சதுருதீன் மற்றும் மீனவ பஞ்சாயத்தார்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page