மயிலாடுதுறை மாவட்டத்தில் சுய உதவி குழுக்கள் மற்றும் சிறு நிதி நிறுவனங்கள் கடன்களை திரும்ப செலுத்துதலில் கண்டிப்பு காட்டக்கூடாது: மாவட்ட ஆட்சியர்

கொரோனா பெருந்தொற்று அதிவேகமாக பரவிவரும் இச்சமயத்தில் முழுஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ள இக்காலகட்டத்தில் நுண் நிதி நிறுவனங்கள் (Micro Finance Institution) மற்றும் சிறு நிதி வங்கிகள் (Small Banking Finance) மூலம் மகளிர் குழுக்கள் பெற்றுள்ள கடன்களை திரும்ப செலுத்துதலில் கண்டிப்பு காட்டக்கூடாது, மேலும் கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதனை மீறி எந்தவொரு சிறு நிதி வங்கிகள் (Micro Finance Institution), நுண்நிதி நிறுவனங்களும் (Small Banking Finance) தங்கள் நிறுவனத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனை திரும்ப செலுத்த நிர்பந்தப்படுத்தியோ அல்லது கட்டாயப்படுத்தியோ வசூல் செய்திடும் தகவல் தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு சிறு நிதி வங்கிகள் (Small Banking Finance), நுண்நிதி நிறுவனங்கள் (Micro Finance Institution) மீது ஏதேனும் புகார்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய நிறுவனம் வழங்கிய கடன் அட்டையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிறுவன தலைமையக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகாரினை தெரிவிக்கலாம்.

மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் நிறுவன பணியாளர்கள் விபரத்தினை குறித்து கொண்டு 18001021080 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் திங்கள் முதல் சனி வரை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை தொடர்பு கொண்டு புகாரினை தெரிவித்திடலாம்.

இதில் தீர்வு எட்டப்படவில்லை எனில் ரிசர்வ் வங்கியின் நுண்நிதி நிறுவனங்களுக்கான தீர்ப்பாயத்தில் (NBFC Ombudsman) 044 – 25395964 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page