மயிலாடுதுறை மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய இளைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ்நாட்டில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2021ஆம் ஆண்டிற்கு “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” வழங்குதல் -மயிலாடுதுறை மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் -மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.இரா.லலிதா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூபாய் 50,000/- ரொக்கம், பாராட்டுப்பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். அதன்படி, 2021-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2021 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.
விருதுக்கான குறிக்கோள் :
1. இளைய சமுதாயத்தினரின் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்குதல்.
2. இளைஞர்களை (15 முதல் 35 வயது வரை) சமூகத் தொண்டுகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல்.
3. தலைச்சிறந்த பணிகளை ஆற்றிய இளைஞர்களுக்கு அங்கீகாரம் அளித்து அவர்களை எதிர்கால தலைமைக்கு உருவாக்குதல் போன்றவையாகும்.

விண்ணப்பிக்க தகுதியான நிபந்தனைகள் :
விருதிற்கு விண்ணப்பிக்கும் ஆண்கள்/பெண்கள் 15 முதல் 35 வயதிற்குட்பட்டு இருத்தல் வேண்டும். நிதியாண்டின் துவக்க நாளான ஏப்ரல் 1, 2021 (01.04.2021) அன்று 15 வயது நிரம்பியவராகவும், நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31, 2021 (31.03.2021) அன்று 35 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் சமூக நலனுக்கான தொண்டு புரிந்தவராக இருத்தல் வேண்டும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் (சான்று இணைக்கப்படல் வேண்டும்). விருதிற்கு கடந்த நிதியாண்டில் (2020-2021) செய்யப்பட்ட சேவைகள் மட்டுமே கருதப்படும். (அதாவது 01.04.2020 முதல் 31.03.2021 வரை) விண்ணப்பதாரரது சேவையானது தன்னார்வம் உடையதாகவும், சமுதாயம் / சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்கியதாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரது சேவையானது தெளிவாக கண்டறியும் வகையிலும், அளவிடக் கூடியதுமாக இருத்தல் வேண்டும். மத்திய / மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / பள்ளிகளில் பணிபுரிவோர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க தகுதி கிடையாது. சமூகத் தொண்டுகளில் பொதுவான ஈடுபாட்டுடன் செயல்பட்டவர்களாகவும். தாங்கள் வசிக்கின்ற பகுதிகளில் பொதுமக்களிடையே நன்மதிப்பு பெற்றவர்களாகவும் இருப்பது முதலமைச்சர் மாநில இளைஞர் விருது தேர்வின் போது கருத்தில் கொள்ளப்படும். ஊரகம் மற்றும் நகர்புற குடிசைப் பகுதிகளில் ஆற்றிய சேவைப்பணிகள், தேசிய ஒருமைப்பாடு, சாகசம், கலை மற்றும் மனமகிழ் செயல்பாடுகள், வயது முதிர்ந்தோருக்கான கல்வித்திட்டங்கள், சமூகத்தில் நலிந்த நிலையிலுள்ளவர்களின் நலன், பட்டியல் இனத்தோர் / மலைவாழ் மக்கள் நலன், தேசிய நலன், சாரணர் மற்றும் வழிகாட்டுதல் மற்றும் உள்ளுர் தேவைகளுக்காகவும், முக்கிய நோக்கங்களுக்காகவும் பணிபுரிந்த விவரங்கள் ஆகியவை முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்காக கருத்தில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 30.06.2021 அன்று மாலை 4.00 மணி ஆகும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in–ல் 30.06.2021 மாலை 4.00 மணிக்குள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். மேற்படி பயன்களைக் கருத்தில் கொண்டு சமூக நலனுக்கான தொண்டு புரிந்த 15 முதல் 35 வயதிற்குட்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா,இ.ஆ.ப.இ தெரிவித்துள்ளார்.

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page