20th September 2021

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துரித காச நோய் கண்டறிதல் நடமாடும் முகாம் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப. கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட மயிலாடுதுறை, குத்தாலம், கொள்ளிடம், செம்பனார்கோவில், சீர்காழி ஆகிய 5 ஒன்றியங்களில் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகளில் இந்த காச நோய் கண்டறிதல் நடமாடும் வாகனம் சென்று அப்பகுதி மக்கள் காச நோய் பரிசோதனை செய்து கொள்ள ஏதுவாக முகாம் நடத்தப்படும்.

இவ்வாகனமானது 5 நாட்களுக்கு 5 ஒன்றியங்களுக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு மேல் தொடர்ந்த இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல், சளியில் ரத்தம் வருதல், இரவில் வியர்த்தல் போன்றவைகள் இருந்தால் அதன் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் துரித காச நோய் கண்டறிதல் நடமாடும் முகாமில் பரிசோதனை செய்துகொள்ளலாம். காசநோய்க்காக சாப்பிடக்கூடிய மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.


மேலும் இம்முகாமில் கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளலாம். மயிலாடுதுறை மாவட்டத்தை காச நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றுவதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் மிக அவசியமானதாகும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப. தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் சுகாதார துறை மரு.மகேந்திரன், மயிலாடுதுறை அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர் மரு.ராஜசேகர், துணை இயக்குனர், மருத்துவ பணிகள் (காசநோய்) ராஜா, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page