26th October 2021

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆய்வுக்கூட்டம்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி தற்செயல் தேர்தல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர் முனைவர். இரா.நந்தகோபால் இ.ஆ.ப., தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் இ.கா.ப., ஆகியோர் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்களிடம் எடுத்து கூறினர்.

 

அப்போது அவர் கூறியதாவது:

 

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய சட்டபூர்வ அறிவிக்கையின்படி தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 09ம் தேதி நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இறப்பு மற்றும் பல்வேறு காரணங்களினால் ஜூன் 30ம் தேதி (30.06.2021) வரை ஏற்பட்டுள்ள 18 காலியிடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ஊராட்சி ஒன்றிய வார்டு 2- காலியிடங்களான குத்தாலம் (15வது வார்டு), செம்பனர்கோவில் (30- வது வார்டு) , கிராம ஊராட்சிமன்ற தலைவர் 1- காலியிடங்களான வேட்டங்குடி மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 15 – காலியிடங்கள் என கூடுதல் 18 பதவிடங்களுக்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் (15.09.2021) தொடங்கி நேற்று வரை (22.09.2021) நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 14 வேட்பு மனுக்களும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 8 வேட்பு மனுக்களும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 47 வேட்பு மனுக்களும், மொத்தம் 69 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் இன்று ஆய்வு செய்ய படுகிறது. வேட்புமனுக்கள் திரும்ப பெறும் நாள் செப்டம்பர் 25ம் தேதி ஆகும்.

வாக்குபதிவு ஒரே கட்டமாக அக்டோபர் 09 ம் தேதி அன்று காலை 07.00 மணிக்கு தொடங்கி மாலை 06.00 மணிக்கு வாக்குபதிவு முடிவடையும். இதில் மாலை ஒருமணிநேரம் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புட்குட்பட்டவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ம் தேதியும், தேர்தல் நடவடிக்கைகள் அக்டோபர் 16 ம் தேதி முடிவடைகிறது.

இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 40 வாக்குசாவடி மையைங்களில் நடைபெறுகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனர்கோவில், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய 5 ஒன்றியங்களில் நடைபெறும் 18 பதவிகளுக்கான இத்தேர்தலில் 19510 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். வாக்கு சாவடிகளில் கொரோனா தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் வாக்குச்சாவடிகளில் வெப்பமானிகை, சுத்திகரிப்பான், முககவசம், முகமூடி, கை உறைகள்,பிபிஇ கிட்ஸ் உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் வழங்கிட வேண்டும். மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க ஏதுவாக வாக்குசாவடிகளுக்கு வாக்குபதிவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்து செல்லவும், அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெறுவதை உறுதி செய்திடவும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் பார்வையாளர் முனைவர்.இரா.நந்தகோபால் இ.ஆ.ப., தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகண்ணன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கவிதா பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடாஜலபதி, உதவி இயக்குநர் ராஜ சேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page