18th October 2021

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான பட்டாமாறுதல் லாகின் உடனே திறந்துவிட கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு ஓ ஏ பி முதியோர் உதவித்தொகை, ஜாதி, வருமானச் சான்றிதழ்கள், பட்டா மாறுதல் சான்றிதழ்கள் இதற்கென்று தமிழக அரசினால் மாவட்டத்திற்கென்று தனியாக அமைக்கப்பட்ட பிரத்தியோக செயலியை நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இருந்து மாற்றும் விதமாக முதற்கட்டமாக முதியோர் உதவித்தொகை செயலி மற்றும் ஜாதி வருமானச் சான்று கொடுக்கும் செயலியை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு என்று பிரிக்கப்பட்டு அந்தப் பணிகள் தற்பொழுது தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. ஆனால் பட்டா மாறுதலுக்கான அரசின் லாகின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இதுவரை பிரிக்கப்படாத காரணத்தினால் லாகின் செயலியை திறந்து விடாத காரணத்தினாலும், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பட்டா மாறுதல் கடந்த சில மாதங்களாகவே நடைபெறாமல் தேங்கி இருக்கின்றது. சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்கள் செயலி திறக்கப்படாத காரணத்தினால் முடங்கிப் போய்க் கிடக்கின்றன. பட்டா மாறுதல் செய்யப்படாத காரணத்தினாலேயே மயிலாடுதுறை ரிஜிஸ்ட்ரேஷன் பத்திரப் பதிவு கோட்டத்தில் உள்ளடங்கியுள்ள மயிலாடுதுறை, செம்பனார்கோவில், குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம், பேரளம், நன்னிலம், குடவாசல் உள்பட 10க்கும் மேற்பட்ட பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில் புதிதாக பதிவு செய்திட விண்ணப்பிக்க முடியாமல் கடந்த சில மாதங்களாகவே ஆயிரக்கணக்கான நபர்கள் தவித்து வருகிறார்கள். அரசின் சார்பிலே பட்டா மாறுதலுக்காக உருவாக்கப்பட்டுள்ள “தமிழ்நிலம்” என்று அழைக்கப்படுகின்ற செயலியின் லாகின் திறக்கப்படாததால் பட்டாமாறுதல் நடைபெறவில்லை. புதிய பட்டாவை பெறாதவர்கள் புதிதாக நிலங்களை பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கவும் முடியாமல் பல மாதங்களாகவே அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு மயிலாடுதுறை பதிவுத் கோட்டத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ளது. அரசிற்கு வருவாய் தரக்கூடிய இந்த விஷயத்தில் மெத்தனமாக நடக்கின்ற மாவட்ட நிர்வாகம் மேலும் காலதாமதம் படுத்தாமல் உடனடியாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கான பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாறுதலுக்கான செயலி லாக்இன்னை உடனே திறந்து விட்டு, பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆகியோருக்கு மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page