மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள தூர்வாரும் பணிகள் மற்றும் வேளாண்மை பணிகளை வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா,, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் உடனிருந்தனர்.

சீர்காழி வட்டத்திற்குட்பட்ட தென்னலக்குடி கிராமத்தில் கூப்பிடுவான் நீரொழிங்கி, மணிகாரணயறு, ஆண்டி வாய்க்கால் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ள தூர்வாரும் பணிகளையும், குத்தாலம் வட்டம் பண்டாரவாடை கிராமத்தில் உளுந்து விதைப்பு பண்ணை வயலையும் அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழக முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றநாள்முதல் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறார்கள். நாள்தோறும் பல்வேறு ஆய்வு கூட்டங்களை நடத்தியும், பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்று பயணம் செய்தும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள். காவேரி டெல்டா பகுதியில் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. அந்தவகையில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் கடந்த ஜீன் 12 ஆம் தேதி; தமிழக முதலமைச்சர் அவர்களால் திறக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 பணிகள் 460.85 கி.மீ நீளத்திற்கு ரூ.573.90 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் 100
சதவீதம் நிறைவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளும் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கி அதிகமகசூல் பெற வேண்டும் என வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் தெட்சிணாமூர்த்தி, வேளாண்மை துறை இணை இயக்குநர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page