26th October 2021

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஊழியர்களுக்கிடையே மோதல்- 3 பேர் கைது!

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு கட்டுகட்டும் பிரிவில் தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த ரமேஷ்(53) என்பவரும், சவக்கிடங்கில் நாகை, ஏனங்குடியைச் சேர்ந்த ரமேஷ்(42) என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

சவக்கிடங்கில் பணியாற்றும் ரமேஷ் பணி இல்லாத நேரத்தில் கட்டுகட்டும் பிரிவுக்கு வருவதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கட்டுகட்டும் பிரிவுக்கு வந்த ரமேஷை நோய்வாய்ப்பட்டவரைப் போல் இருப்பதாக, கட்டுகட்டும் பிரிவில் பணியாற்றும் ரமேஷ் கிண்டல் செய்துள்ளார்.

இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஏனங்குடி ரமேஷை, கரந்தை ரமேஷ் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏனங்குடி ரமேஷ் தனது மகன்கள் தியாகராஜன், தீனதயாளன் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு வரச்சொல்லியுள்ளார்.

பணி முடித்து இரவு வீட்டுக்கு கிளம்பிய கரந்தை ரமேஷை, ஏனங்குடி ரமேஷ் தன் மகன்களுடன் சேர்ந்து அடித்து கீழே தள்ளி உள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கரந்தை ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ஏனங்குடி ரமேஷ் மற்றும் அவரது மகன்கள் தியாகராஜன்(21), தீனதயாளன்(19), ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page