அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவிடும் வகையில் மயிலாடுதுறை “குரு-94” அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டு மேல்நிலைக் கல்வி பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து “குரு-94” என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் பேரிடர் கால நிவாரண உதவிகள், கல்வி உதவிகள் போன்ற பல்வேறு சேவை பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் சிகிச்சை பெற்று வரும் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 7 லட்சம் மதிப்புள்ள ஜெர்மனி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன ஆக்சிஜன் செறிவூட்டிகள், பல்ஸ் ஆக்சிஜன் மீட்டர் கருவிகள் வழங்கும் நிகழ்வு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மற்றும் அரசு மருத்துவமனை முதன்மை குடிமை அலுவலர் டாக்டர்.ராஜசேகர் ஆகியோரிடம் “குரு-94” திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்.இராஜசிம்மன், டாக்டர்.இர்ஷாத் அகமது, வழக்கறிஞர் வேல்சந்த், தொழிலதிபர் ராஜேஷ், பள்ளி முன்னாள் ஆசிரியர் குமார் உள்ளிட்டோர் ஆக்சிஜன் கருவிகளை வழங்கினர்.

மயிலாடுதுறை, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் வசித்து வரும் “குரு-94“ அமைப்பு மாணவர்கள் மயிலாடுதுறையின் மீது பற்றுக் கொண்டு, சூழலுக்கேற்ப தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வரும் “குரு-94” மாணவர்களின் சேவை பணிகளை குருஞான சம்பந்தர் பள்ளி நிர்வாகத்தினர், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page