25th February 2021

மயிலாடுதுறையில் ஜனசதாப்தி ரயிலை முதல் நடை மேடையில் இருந்து இயக்க முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

மயிலாடுதுறையில் ஜனசதாப்தி ரயிலை முதல் நடை மேடையில் இருந்து இயக்க முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

மயிலாடுதுறையிலிருந்து தினமும் மதியம் 2: 50 மணிக்கு கோயம்புத்தூர் செல்வதற்கு ஜனசதாப்தி ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில் இருந்து பல்வேறு ரயில்கள் திருச்சி மற்றும் விழுப்புரம் மார்க்கங்களில் இயக்கப்பட்டுவந்த நிலையில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக, ஜனசதாப்தி கோயம்புத்தூர் ரயில், சோழன் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்ட காரணத்தினால் முதல் நடைமேடை எப்பொழுதுமே ரயில் போக்குவரத்து இன்றி இருக்கிறது. தற்போது ஜனசதாப்தி ரயில் ஐந்தாவது நடைமேடையில் இருந்து இயக்கப்படுவதால் பொதுமக்களுக்கு பெரிதும் சிரமமாக உள்ளது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் எக்ஸ்குலேட்டர் எனப்படுகின்ற நகரும் படிக்கட்டுகள் வசதி இல்லாத காரணத்தினால் பெரியவர்கள், பெண்கள்,குழந்தைகள் ஐந்தாவது நடைமேடைக்கு சென்று ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். தூரம் அதிகமாக இருப்பதனாலும், ரிசர்வேஷன் செய்யப்படுகின்ற காரணத்தினாலும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளை தேடி சென்று அமர வேண்டி இருப்பதனாலும், நேரமும் தூரமும் அதிகமாவதால் உரிய நேரத்தில் அந்தப் பெட்டிக்கு செல்ல முடியாத நிலையில் பல்வேறு பயணிகள் முன்பதிவு செய்திருந்தும் ரயிலில் ஏற முடியாமல் தவறவிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

எனவே, இந்த சிரமங்களை கருத்தில்கொண்டு முதல் நடைமேடையில் ஏற்கனவே சென்றுகொண்டிருந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் வரையிலாவது கோவை ஜனசதாப்தி ரயிலை முதல் நடை மேடையில் நிறுத்தி பயணிகளுக்கு உதவ வேண்டும். என கோரிக்கை வைத்துள்ளார்.

More News

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts