மயிலாடுதுறை அருகே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜக விலிருந்து விலகி திமுக வில் இணந்தனர்


மயிலாடுதுறை, திருக்கடையூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அமிர்த விஜயகுமார் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இன்று அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இதற்கான இணைப்பு விழா திருக்கடையூரில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்ற வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக ஸ்டாலின் கொரானா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக பொதுமக்கள் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். தொழிலாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் எந்தவித உதவியும் செய்யவில்லை, அளவைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் ஜூன் மாதம் 10 வரையிலுள்ள உயிரிழப்புகளை மட்டுமே வெளியிட்டுள்ளனர் சாவு எண்ணிக்கையிலும் தமிழக அரசு மோசடி செய்து வருகிறது என்று குறிப்பிட்டார்.