மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் காலை 8 மணிக்கு துவங்க தயார்நிலை:

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி(தனி), பூம்புகார் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த ஆண்டு மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட் டபோதும், நிர்வாகக் காரணங்களுக்காக இந்த 3 தொகுதிகளும் இன்னமும் நாகப்பட்டினம் மாவட்டத்திலேயே கணக்கில் கொள்ளப்படுகிறது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவல ராக நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் பிரவீன் பி.நாயர் உள்ளார்.

சீர்காழி தொகுதியில் 2,52,510 வாக்காளர்களும், மயிலாடுதுறை தொகுதியில் 2,45,987 வாக்காளர்களும், பூம்புகார் தொகுதியில் 2,75,827 வாக்காளர்களும் உள்ள நிலையில், கட ந்த மாதம் 6ம் தேதி நடந்த தேர்தலில் சீர்காழி தொகுதியில் 10 பேர் போட்டியிட்டனர். பதிவான ஓட்டுகள் 1,88,388. மயிலாடுதுறை தொகுதியில் 14பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் 1,72,621 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதுபோல பூம்புகார் தொகுதியில் 9 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 2,07,944 பேர் வாக்களித்துள்ளனர். சீர்காழி 74.61 சதவீத ம், மயிலாடுதுறையில் 70.17 சதவீதம், பூம்புகாரில் 75.39 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.

இந்த தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் அடங்கிய இயந்திரங்கள் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கல்லூரியில் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வாக்குச் சாவடி முகவர்களின் முன்னிலையில் இன்று காலை சீல் பிரிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என்று சோதனைக்கு பின்னரே அனைவரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

You cannot copy content of this page