மயிலாடுதுறை துலாகட்ட மகாமண்டபத்தை சீர் செய்ய ஆதீனத்திடம் அறம் செய் அறக்கட்டளை கோரிக்கை


மயிலாடுதுறை துலாகட்டம் மையப்பகுதியில் அமைந்துள்ள மகாமண்டப மேற்புறங்களில் மரங்கள் முளைத்து சிதிலமடையும் நிலையில் இருக்கிறது. இங்கு வருடந்தோறும் நடக்கும் காவிரி துலா உற்சவத்தில் 30 நாட்கள் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்வார்கள்.
பெருமை வாய்ந்த இம்மண்டபத்தை சரி செய்யுமாறு மயிலாடுதுறை அறம் செய் அறக்கட்டளை சார்பில் இன்று திருவாவடுதுறை ஆதின நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.