மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்


பிப்ரவரி-28 ஞாயிற்று கிழமை அன்று மாலை 5 மணியளவில் மயிலாடுதுறை அருகாமையிலுள்ள நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் ஹெச்.ராசுதீன் தலைமையில் நடைப்பெற்றது.
மாவட்ட துணைசெயலாளர்கள் நீடூர் மிஸ்பாஹுதீன், அஜ்மல் உசேன், இப்ராஹிம், மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டல துணை செயலாளர் மாயவரம் சபிர் அஹமது, மனிதநேய தொழிற் சங்க மாவட்ட செயலாளர் லியாகத் அலி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் நீடூர் ஜெப்ருதீன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஹாஜா சலீம், தொழிலாரணி மாவட்ட செயலாளர் சர்புதீன், சீர்காழி நகர செயலாளர் ஷபீக் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான் வரவேற்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற பொதுதேர்தல் களப்பணிகள் குறித்து கலந்தாய்வு நடைப்பெற்றது. தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. இறுதியாக மயிலாடுதுறை நகர செயலாளர் மருத்துவர் சதீஸ் சத்யா நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மத்திய அரசு இயற்றியுள்ள சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வது.
- முஸ்லிம்களின் புனித ஸ்தலமான மக்காவிற்கு செல்லக் கூடிய ஹாஜிகளுக்கு இதுவரை இருந்து வந்த சலுகைகள் தொடர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது.
- மயிலாடுதுறை அருகாமையிலுள்ள நீடூர் இரயில்வே கேட் பகுதியில் மக்கள் நெரிசல் அதிகமாக இருப்பதால் அவசர நிலையில் பயணிக்க கூடியவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே மக்கள் கோரிக்கையான இரயில்வே பாலம் அமைக்கும் பணியினை விரைந்து செயல் படுத்த வேண்டுமென வலியுறுத்துவது.
- நீடூர் இரயில் நிலையத்தில் அனைத்து முக்கிய இரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இரயில் நிலைய நடை பாதைகளை சீரமைக்க வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டு கொள்வது.
- நீடூர்-நெய்வாசல் கடைவீதி பகுதியில் சாலை குறுகளாக இருப்பதால் வாகன போக்கு வரத்தின் போது நெரிசலாக உள்ளது.இதனால் மக்கள் சிரம்மத்திற்கு உள்ளாகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம் நேரில் ஆய்வு சாலையினை விரிவு படுத்த வேண்டுமென வலியுறுத்துவது.
ஆகிய தீர்மானங்களுடன் கூட்டம் நிறைவுற்றது.