14th April 2021

மயிலாடுதுறை நகராட்சியால் சாலையோரம் கொளுத்திவிடப்பட்ட குப்பையால் வாழைமரங்கள் தீக்கிரையானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

மயிலாடுதுறையில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்யாமல் நகராட்சி துறையினர் பல்வேறு இடங்களில் குப்பைகளை கொட்டி தீவைத்து கொளுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான நந்தவனம் சுற்றுச்சுவர் அருகே சாலை ஓரத்தில் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டி தீவைத்து கொளுத்தி விடுவது வாடிக்கையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் இன்று குப்பைகள் கொளுத்தி விடப்பட்டதில் நந்தவனத்தில் சுவற்றின் ஓரம் இருந்த வாழைமர இலையின் காய்ந்த சரகுகளில் பிடித்த தீயானது மலமலவென்று காற்றின் வேகத்தில் வாழைதோப்பில் நான்கு திசைகளிலும் பரவியது. வாழைமரங்கள் உள்ள தோப்பு பற்றி எரிவதை பார்த்த தேர்தல் பறக்கும்படை அதிகாரி தனி வட்டாச்சியர் விஜயராகவன் அளித்த தகவலின் பேரில் மயிலாடுதுறை தீயணைப்பு படையினர் இரண்டு வாகனங்களில் வந்து தீயை அணைக்க போராடி தீயை அணைத்தனர். நந்தவனத்தில் உள்ள 7 ஏக்கர் இடத்தில குத்தகைக்கு பாலகுரு என்பவர் 10 ஆயிரம் வாழைமரங்கள் சாகுபடி செய்துள்ளார். வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாரான ஏராளமான மரங்கள் தீக்கிரையாயின. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts