மயிலாடுதுறை பேருந்து நிலையம் அல்லது அரசு கட்டிடத்திற்கு கம்பர் பெயரை சூட்ட கோரிக்கை


மயிலாடுதுறை அறம் செய் அறக்கட்டளை சார்பில், கம்ப ராமாயணம் எழுதிய கம்பரின் பெயரை புதிதாக அமையவுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் ஏதேனும் ஒரு கட்டிடத்திற்கு சூட்ட வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
12-ஆம் நூற்றாண்டில் அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவழுந்தூர் என்ற ஊரில் கிபி 1180-ஆம் ஆண்டில் பிறந்து கம்ப ராமாயணம் இயற்றிய கம்பர் அவர்களின் பெயரை புதிதாக அமைய உள்ள மயிலாடுதுறை பேருந்து நிலையம் அல்லது அரசு நிர்வாக கட்டிடங்களுக்கு சூட்டி அவரை கௌரவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.