26th November 2020

மயிலாடுதுறை மாவட்டம் – கவிதை வெளியீடு

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட அமைப்புக் குழு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று தருமபுரம் ஆதீனத்தில், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம் எழுதிய “மாண்புமிகு மயிலாடுதுறை மாவட்டம் மக்களுக்கு அர்ப்பணிப்போம்” என்ற கவிதைத் தொகுப்பை தருமை ஆதீனம் குருமகா சன்னிதானம் வெளியிட, மாவட்ட அமைப்புக்குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல் பெற்றுக்கொண்டார்.

இதில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம் மற்றும் மாவட்ட அமைப்பு குழுவைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply