17th April 2021

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறைக்கு உதவியாக இருந்து செயல்பட்டு வருகின்ற இந்திய இளைஞர்கள் முன்னேற்ற இயக்கத்தின் போலீஸ் வாலண்டியர்ஸ் 45 நபர்களுக்கு அவர்களின் பணியைப் பாராட்டி ஊக்கப்படுத்தி அவர்களுக்கு அடிப்படையாக ஆகும் செலவினங்களுக்காக உதவித்தொகை வழங்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அவர்களை நேரில் சந்தித்து மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத் தலைநகரமாக தரம் உயர்ந்து அரசின் எல்லாத் துறைகளும் தத்தம் கட்டமைப்பினை பலப் படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், காவல்துறையும் மாவட்ட கண்காணிப்பாளர் நேரடி பார்வையில் சிறப்பாக தங்கள் பணிகளை மயிலாடுதுறை மாவட்டத்திற்குள் ஆற்றிட தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை கொள்ளை கொலை போன்ற சம்பவங்களை தடுத்து உடனடியாக சமூகப் பதற்றம் ஏற்படாமல் இருக்க முறையான கட்டமைப்புகளை உருவாக்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த மாதம் சீர்காழியில் கொள்ளை மற்றும் கொலைகள் நடந்த 4 மணி நேரத்தில் நமது மாவட்ட காவல்துறை ஆற்றிய பணிகளை இம்மாவட்டத்தின் மக்களுக்கு பெரும் நம்பிக்கையும், நாம் பாதுகாப்பாக உள்ளோம் என்ற நினைப்பும் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவிடும் பொருட்டு தன்னார்வலர்கள் இணைந்து இயக்கமாக மயிலாடுதுறையில் தினமும் பயிற்சி பெற்று 45 இளைஞர்கள் சீருடையுடன் கொரோனா காலம் முதல் எந்தவித எதிர்பார்ப்பும், பணப்பயனும் இல்லாமல் தொடர்ந்து தொண்டுள்ளத்தோடு பணியாற்றி வருகின்றார்கள். சேவையை அங்கீகரிக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு அடிப்படையாக தினசரி செலவினங்களுக்கு குறிப்பாக இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் மற்றும் சீருடையை சலவை செய்து புதுப்பிக்க ஏதுவாக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.300 உதவித்தொகை அளித்து ஊக்கப்படுத்தி உதவிடுமாறு மயிலாடுதுறை தொகுதி மக்கள் சார்பில் கனிவுடன் கோருகின்றேன்.

மேலும், மாவட்ட ஆட்சியரை சந்தித்த பொழுது, சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கே.கமலநாதன், ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் ஜெக மணிவாசகம், விடுதலைப் போராட்ட வீரர்கள் வாரிசு சங்க மாநில பொறுப்பாளர் சிங்கார முத்துசாமி, நாட்டுப்புற கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் கிங்பைசல், இந்திய இளைஞர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பெத்தபெருமாள், தமிழ்மொழிவர்மன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

Advertisement

More News

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

தடுப்பூசி பலனை அறுவடை செய்த இஸ்ரேல்: இனி திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என அறிவிப்பு!

admin See author's posts