24th November 2020

மயிலாடுதுறை-பூம்புகார் சாலை ஓரங்களில் செம்மண் கப்பி பரப்புவதா! அப்பர்சுந்தரம் கண்டனம்

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் பிரதான சாலையில், சாலையின் இருபுறமும் சாலையோரங்களில் அரிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காகவும், சாலையை நீண்ட காலத்திற்கு பாதுகாப்பதற்காகவும் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் செம்மன் கப்பி பரப்பப்பட்டு வருகின்றது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள சாலையை பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட இந்த திட்டமும் பணியும் மிகவும் அவசியமாகும், ஆனால் தற்பொழுது மிக மோசமான நிலையில் அப்பணிகள் நடைபெற்று வருவதை பொதுமக்களும் சமூக அக்கறையாளர்களும் மிகவும் வேதனையோடு பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாலையின் இருபுறமும் அரை அடியாவது ஆழம் கொண்ட குழிகளை வெட்டி, 2 அடி அகலத்திற்காவது அந்தக் குப்பைகளை கொட்டினால் மட்டுமே சாலைகளை பாதுகாக்க முடியும். குறிப்பாக எதிர்வரும் மழை காலங்களில் சாலை ஓரங்கள் அரிக்கப்படாமலும்,பாதுகாக்கப்படும். மேலும் இச்சாலையில் கனரக வாகனங்கள் மீன் ஏற்றிச் செல்லுகின்ற வாகனங்கள் செல்லும் பொழுது சாலை ஓரத்திற்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் அந்த வாகனம் செல்வதற்கு ஏதுவாக அமையும். ஆனால் அதனை ஒப்பந்த விதிப்படி முறையாக செயல்படுத்தாமல், சாலை ஓரத்தில் எந்தவித குழியையோ பள்ளமோ வெட்டாமல், வீடுகளில் பெண்கள் கோலம் போடுவதற்கு பயன்படுத்தும் கலர் பொடியை தூவுவதைப் போல பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி சாலையின் இருபுறமும் செம் மண்ணைப் பரப்பி செல்வது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். மேலும் சாலையின் இருபுறமும் செம்மண் பரப்பப்பட்ட இடங்களில் செடிகளும் வெளியில் தெரியும் வண்ணம் இருப்பது அதற்கு சாட்சியாகும். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடன் இருந்து இப்பணிகளை கண்காணிக்காததாலும் ஒப்பந்த விதிப்படி ஒப்பந்ததாரர் இந்த பணியை செய்தாலும் மேற்படி பணியை மீண்டும்,ஒப்பந்த விதிகள் படி, முறைப்படி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம். மேலும் சாலையின் ஓரம் பலமாக செங்கப்பி முறையாக பரப்பப்பட்டுள்ளது என்று எண்ணி இச்சாலையின் வழியாக செல்லுகின்ற வெளியூர் கனரக வாகனங்கள் சாலையை விட்டு ஓரமாக கீழே இறங்கும் பொழுது நிச்சயமாக விபத்துக்கள் ஏற்படுவது உறுதி. ஆகவே விபத்துக்களை தவிர்க்கும் வகையிலும், சாலையை உண்மையாகவே பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடும் சாலை ஓரங்களில் கொட்டப்படுகின்ற இப்படிப்பட்ட செங்கப்பி பரப்பும் பணியை முறையாக விதிப்படி மேற்கொள்ள வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

More News

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி

admin See author's posts

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது

admin See author's posts

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

admin See author's posts

இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்

admin See author's posts