26th October 2021

மயிலாடுதுறை: தரங்கம்பாடி சுனாமி குடியிருப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட சுனாமி குடியிருப்பு பகுதிகளில் 1500 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர்.

சுனாமி குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு இரண்டு தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கபட்டது.இதனால் சுனாமி குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வந்தது.இந்நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அடுத்தடுத்து செயலிழந்தது.

அவ்வப்போது பேரூராட்சி நிர்வாகம் பழுபார்த்தும் சுத்திகரிப்பு நிலையம் தொடந்து இயங்காத நிலைக்கு சென்றது. இதனால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சுனாமி குடியிருப்புக்கு குடிநீர் வழங்கபட்டு வருகிறது.ஆனால் இந்த குடிநீரும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வழங்கப்படுவதாலும் பள்ளமான பகுதிகளுக்குமட்டுமே தண்ணீர் வருவதாலும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதனால் தண்ணீரை குடங்களில் சேகரித்து வைத்தே பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்துவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக கவலை தெரிவித்த மீனவர்கள் சுனாமி குடியிருப்பு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்ளை சீரமைத்து இயக்கவும்,கூடுதல் குடிநீர் குழாய்கள் அமைக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page