6th December 2020

மயிலாடுதுறை, பொறையாறு அருகே உள்ள அனந்தமங்கலம் கோவிலில் இருந்த 3 சாமி சிலைகள் லண்டனில் மீட்பு

மயிலாடுதுறை,  பொறையாறு அருகே உள்ளது அனந்தமங்கலம். இக்கிராமத்தில் அமைந்துள்ளது ராஜகோபாலசாமி கோவில். மூன்று கண்கள் மற்றும் 10 கைகளுடன் அனுமன் காட்சி தரும் சிறப்புடைய கோவில். இத்தகைய அமைப்பு தமிழகத்திலேயே இந்த கோவிலில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனிச்சிறப்பு என்னவென்றால் அனந்தமங்கலம் கோவில், ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.ராமபிரானின் கட்டளையை ஏற்று கடலில் பதுங்கி இருந்த இரு அரக்கர்களை அழித்து, அனுமன் ராமபிரானை சந்திக்க திரும்பிக் கொண்டிருந்தபோது அனந்தமங்கலத்தில் இளைப்பாற இறங்கியுள்ளார். இயற்கை அழகுடன் இருந்த இந்த பகுதியில் மன நிறைவோடு ஆனந்தம் அடைந்தார். எனவே இந்த திருத்தலம் அனந்தமங்கலம் என அழைக்கபடுகிறது.

கடந்த 1978-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி இந்த கோவிலில் இருந்த வெண்கலத்தால் ஆன ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகிய 4 சிலைகள் கொள்ளை போனது. ஒட்டு மொத்தமாக நான்கு சிலைகள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அப்போதைய கோவில் நிர்வாக அதிகாரி செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் பொறையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு 3 பேரை கைது செய்தனர். இருப்பினும் சிலைகளை மீட்க முடியவில்லை.

கொள்ளை போன சிலைகள் பல்வேறு கைகள் மாறி லண்டனுக்கு சென்று விட்டது. ராமர், லட்சுமணர் சிலைகள் தலா 30 கிலோ எடையும், சீதை சிலை 25 கிலோ எடையும், அனுமன் சிலை 15 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது. சிங்கப்பூரில் ‘இந்தியா பிரைடு’ (பெருமை மிக்க இந்தியா) என்ற தன்னார்வ நிறுவனம் இயங்கி வருகிறது.

இதன் அமைப்பாளர்கள் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலவும் தகவல்களின் உதவியுடன் இந்திய கோவில்களில் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளை மீட்க உதவி வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் லண்டனில் ஒரு ராமர் சிலை விற்பனைக்கு உள்ளது என்பதை அறிந்தார்.

அந்த சிலை விஜயநகர பேரரசு காலத்தை (கி.பி 15-ம் நூற்றாண்டு) சேர்ந்தது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக்கொண்டு, இந்தியாவில் உள்ள எந்த கோவிலில் இது போன்ற சிலைகள் காணாமல் போயிருந்தன என்பது குறித்த ஆராய்ச்சியில் விஜயகுமார் இறங்கினார். அப்போது 1978-ம் ஆண்டு அனந்தமங்கலத்தில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் சிலைகள் காணாமல் போனது தெரிய வந்தது.

மேலும் புதுச்சேரியில் உள்ள ஆவணக்காப்பகம் ஒன்றில் இருந்த அனந்தமங்கலம் கோவில் சிலைகள் குறித்த புகைப்படங்கள் மூலம் லண்டனில் விற்பனைக்கு உள்ள சிலை, அனந்தமங்கலம் கோவில் சிலைதான் என உறுதியானது. இதனையடுத்து விஜயகுமார், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், லண்டன் சிறப்பு படையினர் உதவியுடன் இங்கிலாந்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

இதை அறிந்த பழங்கால பொருட்கள் சேகரிக்கும் ஒருவர், அந்த சிலைகள் தன்னிடம் இருப்பதாகவும், திருட்டு சிலை என அறியாமல் தான் வாங்கியதாகவும் தன்னிடம் உள்ள ராமர், லட்சுமணர், சீதை ஆகிய சிலைகளை திருப்பித்தந்து விடுவதாகவும் கூறினார். இதனையடுத்து அந்த சிலைகளை போலீசார் கைப்பற்றி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தனர். இதற்காக நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் லண்டன் முருகன் கோவில் பூசாரிகள் அந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் இந்த சிலைகள் இந்திய தூதர் காயத்ரி குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சிலைகள் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

நான்காவது சிலையான அனுமன் சிலை, லண்டனில் இல்லை. அது வேறு ஒரு தெற்காசிய நாட்டில் உள்ளது என இந்தியா பிரைடு நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர். இது குறித்து மேலும் தகவல் திரட்டி போலீசார் மூலம் அந்த சிலையும் மீட்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

42 ஆண்டுகளுக்கு பின்பு கொள்ளை போன 4 சாமி சிலைகளுள் 3 சிலைகள் மீண்டும் கிடைத்துள்ளதால் இந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.

SOURCE

More News

விருதுநகரில் முதல்வர் பழனிசாமி உருவ பொம்மை எரித்து சாலை மறியல்

admin See author's posts

மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலத்தில் தீ விபத்து : வீட்டை இழந்த குடும்பத்துக்கு பவுன்ராஜ் நிவாரணம் மற்றும் நிதி உதவி

admin See author's posts

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் மக்களை பூம்புகார் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆறுதல்

admin See author's posts

தொடர் மழையால் மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதியில் 80 வீடுகள் இடிந்தன

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு

admin See author's posts

சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

admin See author's posts

ராமநாதபுரம் அருகே நகராமல் நிற்கும் புரெவி!

admin See author's posts

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

admin See author's posts

Leave a Reply