26th October 2021

மயிலாடுதுறை: 90 வயது மூதாட்டியின் மகன்கள் சொத்தினை பிடுங்கிக்கொண்டு விரட்டியதால் தன்னைக் கருணைக் கொலை செய்ய கூறி ஆட்சியரிடம் நேற்று புகார்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நேற்று மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்டா மாற்றுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்வி கடன் , வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் என 72 மனுக்கள் அளிக்கப்பட்டது.

குத்தாலம் தாலுக்கா வானதிராஜபுரத்தை சேர்ந்த தாவுத் பீவி வயது 90 என்ற மூதாட்டி தனது மகன்கள் சொத்தினை பிடுங்கி கொண்டு வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் தனக்கு சொந்தமான வீட்டினை மீட்டு தந்தால் அதனை விற்று அந்த வருமானத்தில் தனது இறுதி காலத்தினை கழித்து கொள்வதாகவும், இல்லையெனில் தன்னை கருணை கொலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தார். மனுவை படித்த இரா.லலிதா வருவாய் கோட்ட அலுவலர் பாலாஜியிடம் தாவுத் பீவியின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்த உரிய தீர்வு பெற்று தர உத்தரவு இட்டார்.

இதுகுறித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கூறுகையில் மூதாட்டியின் மற்ற பிள்ளைகளை விசாரணைக்கு வர சொல்லி இருப்பதாகவும் இதுவரை இளைய மகன் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கு பேசி உள்ளதாகவும் ஓரிரு நாட்களில் விசாரணை நடத்தி மூதாட்டிக்கு பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்யபடும் என்றார்.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page