மயிலாடுதுறை உழவர் சந்தையில் பொங்கல் கரும்பு விற்பனையை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தொடங்கி வைத்தார்.


மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் உழவர் சந்தை இயங்கிவருகிறது. கடந்த 1996-2001 திமுக ஆட்சியின் பொழுது தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் உழவர் சந்தைகள் உருவாக்கப்பட்டன.அதனால் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வேளாண் பொருள்கள் காய்கறிகள் தானியங்கள் பழவகைகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யும் வாய்ப்பினை பெற்றார்கள். பல்வேறு நகரங்களில் உள்ள உழவர் சந்தைகள் செயல்பாடுகள் இன்றி இருக்கின்றன.
இந்நிலையில் மயிலாடுதுறை உழவர் சந்தையினை 2002ஆம் ஆண்டு மூடப்பட்ட பொழுது அதனை தடுத்து நிறுத்தி மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்த அன்றைய சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் தொடர்ந்து இந்த உழவர் சந்தையில் மேம்பாட்டிற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தற்பொழுது உழவர் சந்தையை எக்ஸ்னோரா தொண்டு நிறுவனத்தின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் அசோக் தனி கவனம் செலுத்தி விவசாயிகளை அழைத்து வந்து காய்கறி விற்பனையை நடத்துவதற்கு ஊக்கப்படுத்தி வந்து கொண்டிருக்கின்றார். அதன் ஒரு பகுதியாக தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு பொங்கல் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, மற்றும் மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில் பகுதிகளில் உள்ள விவசாயிகள் நேரடியாக விளைவிக்கப்பட்ட காய்கறிகளை கொண்டு வந்து சிறப்பு பொங்கல் பண்டிகை விற்பனையை துவக்கி உள்ளார்கள். கரும்பு விற்பனையை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் துவக்கி வைத்தார்.
விவசாயிகளே விற்பனை செய்கின்ற காரணத்தினால் லாப நோக்கம் இல்லாமல் குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறிகள் மற்றும் கரும்பு விற்பனை செய்வது அறிந்து அனைத்து விவசாயிகளையும் பாராட்டினார். மயிலாடுதுறை வாழ் மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு குறைந்த விலை கரும்பு களையும் காய்கறிகளையும் வாங்கிச் செல்லுமாறு வேண்டுகோள் வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா மாவட்ட தலைவர் அசோக், கௌரவத்தலைவர் அறிவழகன், சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம், ஜெயப்பிரியா ரவீந்திரன் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் பெண்கள் பங்கேற்றார்கள்.