மயிலாடுதுறை : 3 பேரவை தொகுதிகளுக்கு வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு

மயிலாடுதுறையில் வாக்காளர் இறுதி பட்டியலை கோட்டாட்சியர் வ. மகாராணி வெளியிட, அதைப் பெற்றுக் கொள்கின்றனர் அதிமுக, திமுக, பாஜக நிர்வாகிகள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குக்கான வாக்காளர் இறுதி பட்டியலை மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ. மகாராணி புதன்கிழமை வெளியிட்டார்.

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாக்காளர் இறுதி பட்டியலை வருவாய் கோட்டாட்சியர் வ. மகாராணி வெளியிட, அதிமுக நகரச் செயலாளர் நாஞ்சில் கே. கார்த்தி, திமுக மாவட்ட வழக்குறிஞர் அணி அமைப்பாளர் ராம. சேயோன், பாஜக நகரத் தலைவர் மோடி.கண்ணன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

அப்போது வட்டாச்சியர் ஜெ. ஜெனிட்டா மேரி, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மலர்விழி, மயிலாடுதுறை தேர்தல் துணை வட்டாச்சியர் எம்.மகேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

சீர்காழி (எண் :160) சட்டப் பேரவைத் தொகுதியில் 1,23,899 ஆண் வாக்காளர்கள், 1,27,868 பெண் வாக்காளர்கள் மற்றும் 12 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,51,779 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். மயிலாடுதுறை (எண் :161) சட்டப் பேரவைத் தொகுதியில் 1,21,841 ஆண் வாக்காளர்கள், 1,23,841 பெண் வாக்காளர்கள்,, மற்றும் 15 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,45,022 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். பூம்புகார் எண் :162) சட்டப் பேரவைத் தொகுதியில் 1,35,862 ஆண் வாக்காளர்கள், 1,39,713 பெண் வாக்காளர்கள்,, மற்றும் 7 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,75,582 மொத்த வாக்காளர்கள் உள்ளனர்.

More News

வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

admin See author's posts

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts