27th November 2020

மயிலாடுதுறையில் திரையரங்க தொழிலாளர்களுக்கு நிவாரணம்

மயிலாடுதுறை தாலுக்காவில் உள்ள திரையரங்குகள் கடந்த மார்ச் மாதம் முதல் கொரானா நோயின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தியேட்டர்களில் பணியாற்றிவந்த மேலாளர்கள், காசாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், இயந்திரப் பணியாளர்கள், டிக்கெட் விநியோகம் செய்பவர்கள் என்று அனைத்து தரப்பு திரையரங்கத்தை நம்பிய வாழ்கின்ற தொழிலாளர்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். மேலும் மாற்றுத்தொழில்தெரியாமலும் வருவாய் ஏதுமின்றியும் அந்த குடும்பத்தினர் வறுமையில் இருப்பதை அறிந்து மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் திரையரங்க தொழிலாளர்களை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து, அரிசி மற்றும் மளிகை பொருட்களுடன் நிவாரண உதவித் தொகையும் வழங்கினார்.

மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு திரையரங்க தொழிலாளர்கள் சீனிவாசன், பாண்டியன், பூபதி, ராஜேந்திரன், வசந்தா, தனபால், முருகன்,பாஸ்கரன், கண்ணன், மிலிட்டரி கலியமூர்த்தி, பூமிநாதன் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் அருண்குமார், தொழிலாளர்கள் சங்க செயலாளர் அ.அப்பர் சுந்தரம். துணைச்செயலாளர் கோடங்குடி சி. சங்கர், தியேட்டர் மேலாளர்கள் தேவதாஸ், ஜெகதீசன் விடுதலைப் போராட்ட வீரர்கள் நலவுரிமைச் சங்க மாநில அமைப்பாளர் சிங்கார முத்துசாமி, புறநிலை அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மங்கைமடம் ரவிச்சந்திரன், வானகிரி கண்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றார்கள்.

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts