17th April 2021

மயிலாடுதுறையில் மயூரநாதர் அஞ்சலி தொடங்கியது – ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்பு

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாட்டியாஞ்சலி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்தவகையில் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாருக்குப் பறைசாற்றும் உன்னத நோக்கோடு மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 15-ஆம் ஆண்டு மயூரநாட்டியாஞ்சலி விழா அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தில் கோலாகலமாக தொடங்கியது.

துவக்க விழாவில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் தலைவர் பரணிதரன் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மருத்துவர் செல்வம், சிவலிங்கம், ரவிச்சந்திரன், செந்தில்வேல், பாண்டுரங்கன், முனைவர் சத்தியன், செந்தில்குமார், அழகேசன் உள்ளிட்டோர் மங்கல ஒளிவிளக்கேற்றி மயூரநாட்டியாஞ்சலி விழாவை தொடங்கி வைத்தனர்.

மங்கல இசையுடன் தொடங்கிய முதல் நாள் நாட்டியாஞ்சலி விழாவில் சென்னை நரேந்ரா நாட்டிய குழுவினர், கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலா குழுவினர், கோயம்புத்தூர் சங்கரம் ஸ்கூல் ஆஃப் டான்ஸ் குழுவினர் மற்றும் ஸ்ரீவிஷ்ணு நாட்டியாலயா உள்ளிட்ட குழுவினரின் நாட்டிய நிகழ்வுகள் நடைபெற்றது.

மயூர நாட்டியாஞ்சலி விழாவில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் குருமார்களுக்கும், கலைஞர்களுக்கும் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 15-ஆம் ஆண்டு மயூரநாட்டியாஞ்சலி விழாவில் நாதஸ்வர இசைக் கலைஞர் விவேகானந்தன் கலைப்பணியை பாராட்டி “மயூர நாதஸ்வர சுகஸ்வர இளவல்” விருதும், தவில் இசைக் கலைஞர் ரெட்டியூர் ஹரிஹரனுக்கு “மயூர லயஞான தவிலிசை இளவல்” என்ற விருதும், நடனக் கலைஞர் சென்னை நரேந்திரகுமாருக்கு “மயூர நட்டுவாங்க நண்மனி” விருதும், மூத்த நடனக் கலைஞர் கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலாவின் கலைப் பணியை பாராட்டி “மணிமேகலை பொற்சதங்கை” என்ற விருதையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா ஐபிஎஸ், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வழங்கி பாராட்டினர்.

திங்கள்கிழமை தொடங்கிய மயூர நாட்டியாஞ்சலி தொடர்ந்து மூன்று நாட்கள் வியாழக்கிழமை வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை ஐந்து மணி முதல் இரவு வரை பல்வேறு நாட்டிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

முதல் நாள் நாட்டியாஞ்சலி விழாவில் ஏராளமான கலை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

அறக்கட்டளை செயலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார். இணைச் செயலாளர் அகஸ்டின் விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

More News

நடிகர் விவேக்கின் மறைவு பேரதிர்ச்சி அளித்துள்ளதாக திரையுலகினர் இரங்கல்

admin See author's posts

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts