மயிலாடுதுறையில் தொடங்கிய மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இரண்டாம் நாள் !


மயிலாடுதுறையில் தொடங்கிய மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இரண்டாம் நாள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பரதநாட்டிய கலைஞர்கள் நடனம் ஆடினர்
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாட்டியாஞ்சலி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்தவகையில் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 15-ஆம் ஆண்டு மயூரநாட்டியாஞ்சலி விழா அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தில் தொடங்கியது.
மங்கல மங்கல இசையுடன் தொடங்கிய இரண்டாம் நாள் மயூரநாட்டியாஞ்சலி விழாவில்.
மயிலாடுதுறை ஶ்ரீ சண்முகா நாட்டியப் பள்ளி குழுவினர் பாரம்பரிய வழியில் சிவபக்தி என்ற நாட்டியத்தையும், சேலம் ஐஸ்வர்யா ஐயர் “உள்ளம் உருக்கும் ஐயனின் நாமம்” என்ற நாட்டியத்தையும், வாலாஜா லாஸ்யா டான்ஸ் அகாடமி குழுவினர் “பக்தனின் பார்வையில் ஆனந்த தாண்டவம்” என்ற நாட்டிய நிகழ்வையும், சேலம் ஜதீஸ்வரம் டான்ஸ் அகாடமி குழுவினர் “சதங்கை பாடும் ஐயனின் பாதம்” என்ற நாட்டியத்தையும், கோவை ராஜாமணியம்மாள் கலை கூட குழுவினர் “கொஞ்சும் சலங்கை” நாட்டிய நிகழ்ச்சி நடத்தினர்.