25th February 2021

40 ஆண்டுகளாக மருத்துவ சேவையாற்றி வரும் டாக்டர்.செல்வத்திற்கு தருமையாதீன “மருத்துவக் கலைச்செல்வர்” விருது

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் சார்பில் டாக்டர்.செல்வத்திற்கு “மருத்துவக் கலைச்செல்வர்” விருதும் தங்கப்பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

தருமை ஆதீனம் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களின் பணிகளை பாராட்டி ஆதினங்களில் நடைபெறும் விழாக்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தருமை ஆதீனத்தில் அண்மையில் நடைபெற்ற தருமையாதீன குருமகா சன்னிதானங்களின் குருமூர்த்த ஆலயங்களின் கும்பாபிஷேக விழாவில், மருத்துவத்துறையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நாற்பது ஆண்டுகளாக சேவையாற்றி வரும் அருண்பிரியா மருத்துவ மனையின் தலைவர் டாக்டர்.இரா.செல்வத்தின் பணியை பாராட்டி, தருமை ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் “மருத்துவக் கலைச்செல்வர்” என்ற விருதும், தங்கப்பதக்கமும் வழங்கி பாராட்டினார்.

மருத்துவப் பணி, சமூக நலப்பணி, ஆன்மீகப் பணி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்து வருபவரும், மக்களால் கைராசிக்கார மருத்துவர் என அழைக்கப்படும் டாக்டர்.இரா.செல்வம் தருமையாதீன விருதும், பதக்கமும் பெற்றிருப்பதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், இந்திய மருத்துவக் கழக மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More News

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts

ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தின் ‘டார்க் மோட்’ வசதி

admin See author's posts