3rd December 2020

மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க இலவசமாக இடம் தர முன்வந்த நீடூர் அரபிக் கல்லூரி இடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட கோரிக்கை

மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க இலவசமாக இடம் தர முன்வந்த நீடூர் அரபிக் கல்லூரி இடத்தை மாவட்ட ஆட்சியர் உடனடியாக பார்வையிட மயிலாடுதுறை நுகர்வோர் பாதுகாப்பு கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் கிராமத்தை தேர்வு செய்திருந்தார். மயிலாடுதுறை மக்கள் நீண்டகாலமாக தங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி வேண்டுமென்றும், பிற மருத்துவக் கல்லூரிகள் மயிலாடுதுறையில் இருந்து வெகு தூரத்தில் இருப்பதால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போகிறது என்பதாலும் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மயிலாடுதுறை அருகில் உள்ள நீடூர் அரபிக் கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு சொந்தமான இருபது ஏக்கர் நிலம் நீடூர் அருகில் எரும்பு காடு என்னும் ஊரில் இருப்பதாகவும், அந்த நிலத்தை நாகை மாவட்டத்தில் அமைய இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இலவசமாக தருவதற்கு முன்வந்தார்கள். அதற்கான ஒப்புதல் கடிதம் மற்றும் பாத்திரத்தை சென்றவாரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நாகப்பட்டினத்தில் வழங்கினார்கள்.

அதனடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக நீடூர் அரபிக் கல்லூரி இலவசமாக தர முன்வந்த இடத்தை உடனடியாக கள ஆய்வு செய்து அந்த அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என மயிலாடுதுறை நுகர்வோர் பாதுகாப்பு கழக தலைவர் வழக்கறிஞர் ராம.சேயோன் நாகை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

Leave a Reply