25th November 2020

நாகை மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க கோரிக்கை: ராம.சேயோன்

நாகை மாவட்டத்தில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் தொடங்க தமிழக அரசுக்கு நுகர்வோர் பாதுகாப்பு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது தமிழகத்தில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு தமிழக அரசுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிகிறது. தமிழக அரசு அதற்கான இடத்தை தேர்வு செய்யும் முயற்சியில் உள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கான மருத்துவ கல்லூரியை நாகப்பட்டினத்தில் அமைக்க அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முயற்சி செய்வதாக தெரிகிறது.

நாகப்பட்டினம் உட்கோட்டத்தை விட மயிலாடுதுறை உட்கோட்டம் 2 லட்சம் மக்கள் தொகையை கூடுதலாக கொண்டது. நாகப்பட்டினத்தை விட மயிலாடுதுறையே மருத்துவக்கல்லூரி அமைக்க சிறந்த ஊராகும். காரணம் நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் திருவாரூர் மருத்துவக் கல்லூரியும் காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியும் உள்ளது. ஆனால் மயிலாடுதுறையில் இருந்து 40 கி.மீ தொலைவில் திருவாரூர் மருத்துவக் கல்லூரியும், சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியும் உள்ளது. தஞ்சை மருத்துக் வகல்லூரி 80 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆகையால் தமிழக அரசு மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டுகிறோம். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசை மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தி மயிலாடுதுறைக்கு மருத்துவக் கல்லூரியை பெற்றுத்தர வேண்டுகிறோம். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினராக 2009-2014 பணியாற்றியதை மனதில் கொண்டு மயிலாடுதுறைக்கு மருத்துவக்கல்லூரியை பெற்றுத் தரவேண்டும். மயிலாடுதுறை வட்டத்தில் 3 சற்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் என்பதால் அவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி மயிலாடுதுறைக்கு மருத்துவக் கல்லூரி பெற்று தருவதில் எந்த சிக்கலும் இல்லை. மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கனவான புதிய மாவட்டம் மற்றும் புதிய மருத்துவ கல்லூரி ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்புக் கழக தலைவர் வழக்குரைஞர் ராம.சேயோன் அறிவிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply