25th September 2021

‘மக்களைத் தேடி மருத்துவம்’. மகத்தான திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுக்கே சென்று மருந்து வழங்கும் மகத்தான திட்டத்தை சாமனப்பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் மக்களைத் தேடி வரும் மருத்துவம் என்ற திட்டம் தொடங்கவுள்ளதாகவும் அந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடக்கி வைப்பார் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அதன் படி, கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சரோஜா என்பவற்றின் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவருக்கான மருந்துகளை வழங்கினார். அதே போல. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சந்திரசேகரன் என்பவரின் இல்லத்திற்கு சென்று மருந்து மாத்திரைகளை வழங்கினார். முகவூர் பகுதியை சேர்ந்த கால்கள் இழந்த இருவருக்கு செயற்கை கால்களையும் சூளகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 108 ஆம்புலன்ஸையும் வழங்கினார்.

நோயாளிகளின் வீட்டிற்கே சென்று அவர்களுக்கு மருந்து அளிக்க இந்த புதிய திட்டம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்டோர் மருத்துவ வாகனத்தில் வீடு தேடி சென்று சிகிச்சை அளிப்பார்கள். நாட்பட்ட நோய்களான புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கும் மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page