சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ள பிரமுகர்களுக்கு கொரோனா பரிசோதனை


கொரோனா வைரஸ் தொற்று அச்சுருத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு திருக்கோயில்களின் நடை சாத்தப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத் துறை கீழ் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. அந்த திருக்கோயில்களில் லட்சக்கணக்கான அர்ச்சகர்களும், ஓதுவார்களும் பணியாற்றிவருகிறார்கள்.
மேற்படி அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் பசி பட்டினியால் வாடி வருகிறார்கள். அவர்களுக்கு நிதி உதவி தமிழக அரசாங்கம் வழங்க வேண்டும். அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் சிறப்பு நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் கோரிக்கை விடுத்துள்ளார்.