அதிமுக முன்னாள் எம்எல்ஏ சசிகலாவுடன் சந்திப்பு..!


ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த சசிகலா, விடுதலையாகி நேற்று (பிப் ,9) சென்னை திரும்பினார். இந்நிலையில், நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் அதிமுக கொடி கட்டிய காரில், இன்று (பிப்,10) தி நகர் அபிபுல்லா சாலையில் சசிகலா தங்கியிருக்கும் வீட்டில் அவரை சந்தித்தபின் பத்திரிகையாளர்களிடம்,கூறுகையில், எனக்கு இரண்டு முறை சிபாரிசு செய்து சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் சசிகலா. அதில் ஒருமுறை தோற்றேன் ஒருமுறை வென்றேன். சசிகலாவால் பலனடைந்தவர்கள் தற்போது நன்றி மறந்து விட்டு அவரை திட்டுகிறார்கள்.
நான் என்றைக்கும் சசிகலாவின் விசுவாசி தான் என்றார். மேலும், டிடிவி தினகரனை நம்பியவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள் என முதல்வர் பழனிசாமி கூறியது பற்றி கேட்டதற்கு, யாரும் தெருவில் கையேந்தி நிற்கவில்லை என பதிலளித்தார்.
தவறு செய்தவர்கள், நன்றி கெட்டவர்கள் விரைவில் சசிகலா காலில் வந்து விழுவார்கள். தளவாய் சுந்தரத்தின் தூண்டுதலின் பேரிலேயே என் மீது பாலியல் பலாத்கார வழக்குப் போடப்பட்டு நான் அசிங்கப்படுத்த பட்டேன். இவ்வாறு நாஞ்சில் முருகேசன் தெரிவித்தார்.