17th April 2021

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை தடைசெய்ய மத்திய மாநில அரசுகளுக்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை வேண்டுகோள்

யூடியூப் சேனலில் கருப்பர் கூட்டம் என்ற பெயரில் தமிழர்களுக்கு களங்கம் விளைவிக்கும் கூட்டமொன்று இந்து கடவுள்களை தவறாக சித்தரித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
சில வீடியோக்களில் ஆபாசமாக சித்தரித்து வருகிறார்கள். தேவையில்லாமல் மக்களிடையே ஒரு குழப்பத்தையும் ,
ஆபத்தையும் விளைவித்து வருகிறார்கள். இவர்கள் தொடர்ந்து யூடியூப் சேனலில் இதுபோன்ற அவதூறு செய்திகளை வெளியிட்டால், தமிழ்நாடே கொந்தளிக்க கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும்.

அண்மையில் தமிழர்களால் ஆண்டாண்டு காலமாய் வழிபட்டுக் கொண்டு இருக்கக் கூடிய முருகப்பெருமானை போற்றக்கூடிய கந்த சஷ்டி கவசம் என்ற புனித நூலை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டிருந்தார்கள் . அதற்கு அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தது காவல்நிலைய புகார்கள் எல்லாம் கொடுக்கப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மற்றொருவர் சரணடைந்துள்ளார். ஆனால் அது மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வல்ல. நிரந்தரமாக கருப்பர் கூட்ட யூடியூப் சேனலை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். எப்படி மத்திய அரசு டிக் டாக் என்ற சீனாவின் ஆப்பை தடை செய்ததோ, அதுபோல கருப்பர் கூட்டத்தின் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும். தொடர்ந்து அவர்கள் இந்து கடவுள்களை குறிப்பாக தமிழர்களால் வழிபடக் கூடியது கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து வருகிறார்கள். இழிவு படுத்தி வருகிறார்கள். இதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.

கருப்பர் கூட்டத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட கூடிய ஒரு நிலைமை தற்போது ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு இந்த பிரச்சனையை சரியாக கையாளவில்லை. தமிழக முதலமைச்சர் கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. தமிழகத்தின் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பெயருக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். நடவடிக்கை எதுவும் இல்லை. கறுப்பர் கூட்டத்தின் மீது கொடுக்கப்பட்ட புகார்களில் சென்னையில் மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ஏனைய இடங்களில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த ஒரு நபர் சென்னையிலிருந்து புதுவைக்கு வந்து அங்கு உள்ள ஒரு காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார் . இ பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து எப்படி வந்தார் என்பதற்கு எந்த விசாரணையும் இல்லை .அவரை சென்னையில் இருந்து புறப்பட அனுமதித்தது யார் என்பதும் புதுவைக் உள்ளே நுழைய அனுமதித்தது யார் என்பதும் தெரியவில்லை. மத்திய மாநில அரசுகள் கருப்பர் கூட்டத்தின் நடவடிக்கையை உற்று நோக்க வேண்டும். அவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் மதப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களை தடை செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

 

More News

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

தடுப்பூசி பலனை அறுவடை செய்த இஸ்ரேல்: இனி திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என அறிவிப்பு!

admin See author's posts

Leave a Reply