சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை நீட்டிப்பு

சென்னையில் பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயிர்ல நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 10-ம் தேதி முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்றும், அதிகப் பயணிகள் வரும் காலை 8.30 – 10.30 மணிக்கும், மாலையில் 5-8 மணி வரையிலும் 5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. முதல்கட்டமாக, விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.

முதல் நாளில், மெட்ரோ ரயில்களில் பயணிக்க குறைந்த அளவில் பயணிகள் பயணம் செய்தனா். பயணிகள் அனைவரும் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி மூலமாக பரிசோதிக்கப்பட்டனா். தொடா்ந்து, நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். மெட்ரோ ரயில்நிலையத்திலும், மெட்ரோ ரயிலிலும் சமூக இடைவெளி பின்பற்றி அறிவுறுத்தப்பட்டனா். முகக்கவசம் அணியாத பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை காலை (செப்.9) தொடங்கியது. பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை அடைந்தது.

ஆனால் சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் வழித்தடத்தில் தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் வரை செல்லாம்.

அலுவலக நேரமான (நெரிசல்மிக்க நேரம்) காலை 8.30 மணி முதல் காலை 10.30 வரையும், மாலை 5 மணி முதல் இரவு வரையும் 5 நிமிஷ இடைவெளியிலும், நெரிசல் அல்லாத நேரங்களில் 10 நிமிஷ இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் பாதுகாப்புக்காக, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மெட்ரோ ரயில்களும் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தமான காற்று சுழற்சியை அதிகரிக்கவும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றி பயணிகள் மெட்ரோ ரயிலில் ஏறவும் இறங்கவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படும் நேரம் 20 விநாடிகளில் இருந்து 50 விநாடிகளாக உயா்த்தப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காகவும், அனைத்து பயணிகள் பாதுகாப்புக்காகவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து விதிமுறைகளையும் பயணிகள் பின்பற்றி, நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

SOURCE

More News

இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு முடிவு தெரியவரும் – எல்.முருகன்

admin See author's posts

ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்: சிபிஎஸ்இ நிர்வாகம்

admin See author's posts

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: முதல் கட்டமாக ஆறு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக

admin See author's posts

கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் வாய்ஸ், வீடியோ கால் வசதி அறிமுகம்!

admin See author's posts

பாமக தேர்தல் அறிக்கை!

admin See author's posts

அதிக டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கிய இந்திய கேப்டன்: தோனியின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி!

admin See author's posts

மயிலாடுதுறை நகராட்சியால் சாலையோரம் கொளுத்திவிடப்பட்ட குப்பையால் வாழைமரங்கள் தீக்கிரையானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

admin See author's posts

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது

admin See author's posts

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் – கமல்ஹாசன்

admin See author's posts

மயிலாடுதுறையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், காவலர்கள் அணிவகுப்பு

admin See author's posts

Leave a Reply