நாளை முதல் நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள் திறப்பு


நாடு முழுவதும் ஜூலை 6 முதல் நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ள நிலையில், அங்கு பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா தொற்று இல்லாத மண்டலங்களில் உள்ள நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மட்டும் திறக்கப்படும் என்றும், மறு உத்தரவு வரும் வரை, இ-பாஸ் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.