21st September 2021

லட்சக்கணக்கான அப்பாவிகள் உயிரிழக்கிறர்கள் முழுஊரடங்கு மட்டும்தான் தீர்வு: ராகுல் காந்தி அறிவுரை

நாட்டில் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் 2-வது அலையைத் தடுத்த நிறுத்த முழு ஊரடங்கை செயல்படுத்துவதுதான் ஒரே வழி என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை மோசமான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாள்தோறும் 3.50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழக்கிறார்கள்.

இந்தியாவில் நிலவும் சூழலைப் பார்த்து உலகில் உள்ள பல்வேறு மருத்துவ வல்லுநர்களும், தொற்றுநோய்தடுப்பு வல்லுநர்களும் லாக்டவுன் மட்டுமே தீர்வு என்று தெரிவித்துள்ளனர். மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநிலங்கள் 14 நாட்கள் லாக்டவுனை பிறப்பிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளன. ஆனால், பொருளாதாரம் பாதிக்கும் என்ற நோக்கில் பல மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன், பயணத்தில் கட்டுப்பாடு, எல்லைகளை மூடுதல் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தியுள்ளது.
பொருளதாார ரீதியாக நலிந்த மக்கள், ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோருக்கு நியாய் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் ‘ மத்திய அரசுக்கு எந்த யோசனையும் கிடைக்கவில்லை. நாட்டில் பரவிவரும் கரோனா வைரஸ் 2-வது அலையைத் தடுத்து நிறுத்த ஒரே வழி, முழுமையான லாக்டவுனை நாட்டில் கொண்டுவருவதுதான்

அதேசமயம், முழு லாக்டவுன் கொண்டுவரும்போது, ஏழைகள், எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள் ஆகியோரின் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் நியாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், உதவித்தொகை வழங்கிட வேண்டும். மத்திய அரசு செயல்பாடின்றி இருப்பதால் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள்’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

More News

மயிலாடுதுறை: பலத்த மழையால் டி.எஸ்.பி.அலுவலகத்தை நீர் சூழ்ந்தது!

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆசி பெற்றார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் மாபெரும் தூய்மைப்பணி முகாம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

admin See author's posts

வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையார், கிடராங்கொண்டான் பகுதிகளில் மின்நிறுத்தம்!

admin See author's posts

தஞ்சாவூரில் 100 ஆண்டுகள் பழமையான மூன்று கட்டிடங்களைக் கையகப்படுத்திய மாநகராட்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் ஆபத்துகளை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் நேற்று ஆழ்வார் குளத்தில் பொதுமக்களுக்கு தத்துவ செயல்விளக்கம்!

admin See author's posts

விரைவில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது!

admin See author's posts

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்!

admin See author's posts

மயிலாடுதுறை: வீர வணக்கம் நாள் கூட்டம் எஸ்.ஆர்.எம்.யு சார்பில் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது!

admin See author's posts

மயிலாடுதுறையில் அலுமினிய கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு!

admin See author's posts

You cannot copy content of this page