வேதாரண்யத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் திட்டப்பணி அமைச்சர் ஓ.எஸ் மணியன் ஆய்வு


வேதாரணயம் தாலுகா அகஸ்தியன் பள்ளி முதல் திருத்துறைப்பூண்டி வரை அகல ரயில் பாதை மாற்றும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.இப்பணியினை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு செய்தார்.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட இந்த ரயில் பாதை தற்போது அகற்றப்பட்டு அகல ரயில் பாதையாக போடும் பணி நடைபெறுகிறது. தற்போது போடப்படும் ரயில்வே பாதை மிக உயரமாக அமைக்கபட்டதால் பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக்கள் சுடுகாட்டுக்கு செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், மேலாண்மை இடு பொருட்களை எடுத்து செல்வது,அன்றாட அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வது,பொது மக்கள் மருத்துவமனைக்கு செல்வது போன்ற வசதிகள் பாதிக்கப்ட்டுள்ளது.இது குறித்து இன்று (19ம் தேதி)நாகையில் ரயில்வேத்துறை அதிகாரிகள் மாவட்ட கலெக்டர் உடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.இதையொட்டி ஓ.எஸ் மணியன் பொது மக்களிடம் ரயில்வே பாதையில் உள்ள குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று நேரடியாகவும் ஆய்வு செய்தார்.அகஸ்தியன் பள்ளி பூந்தோப்பு ஆறுகாட்டுத்துறை,நெய்விளக்கு,குரவப்புலம்,காரியப்பட்டினம் ,வடமழை,மனக்காடு ஆகிய பகுதிகளில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு செய்தார். அகஸ்தியன் பள்ளி,பூவன்தோப்பு,குரவப்புலம்,உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் ஓ.எஸ் மணியன் அரை கிலோமீட்டர் முதல் ஒட்டு கிலோமீட்டர் வரை நடத்தே ரயில்வே திட்டப்பணியில் மக்களுக்கு என்ன குறைகள் இருக்கிறது என கேட்டறிந்தார்.