24th November 2020

இஸ்லாமியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் தங்களுக்கு தனியாக அடக்கம் செய்வதற்கு கபர்ஸ்தான் நிலம் வழங்கவேண்டும் என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். சுமார் 20 ஆண்டுகளாக அவர்கள் வலியுறுத்திவந்த கோரிக்கையை நிறைவேற்ற உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்குறுதி அளித்திருந்தார்.

இதற்கான இடத்தை தேர்வு செய்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்ட நிலையில், மதுக்கரையில் முக்கிய சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளுடன் சென்று அந்த இடத்தை பார்வையிட்டார். அவர்களுடன் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் சென்றிருந்தனர். ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மத்திப்பிலான 1.75 ஏக்கர் நிலம் இஸ்லாமிய சமூகத்தினருக்கு வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி , 20 ஆண்டுகளாக இந்த பகுதி இஸ்லாமியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர் என்பதை அறிவேன். இஸ்லாமியர்களுக்கு எப்படியாவது கபர்ஸ்தான் நிலம் வழங்கப்படும் என கூறியிருந்தேன்.அதன்படியே தேர்வு செய்யப்பட்ட இடம் ஒன்றே முக்கால் ஏக்கர் உடையது . இந்த நிலம் முக்கிய சாலை வழியாக அமைந்துள்ளது என்பதை அனைவரும் அறிவீர்கள். இதனை அடுத்து கிறிஸ்தவர்களுக்கும் தனியாக மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கோவை மாவட்டத்துக்கு 50 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை ஐந்து ஆண்டுகளில் கொடுத்துள்ளோம். கோவை சத்தி ரோடு, அவிநாசி ரோடு, திருச்சி ரோடு சாலைகளில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கோவைக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

More News

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts