மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் புரவி புயல் காரணமாக இடிந்த வீடுகள், பழுந்தடைந்த தொகுப்பு வீடுகள் குறித்து எம்.எல்.ஏ ஆய்வு


மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த புரவி புயல் காரணமாக கனமழை பெய்தது இதன் காரணமாக 300 கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துன. மேலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் மழையால் சேதமடைந்து மேற்கூரைகள் இடியும் நிலை உள்ளது. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டமங்கலம், முட்டம், கோடங்குடி, நலத்துக்குடி, கீரங்குடி உள்ளிட்ட ஊர்களில் மழையால் இடிந்த வீடுகளை நேரில் பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்னன், ஊராட்சி ஒன்றிய வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகள் இடிந்ததை பற்றி கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், விரைவில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க படும் என்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தொகுதி வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.