மயிலாடுதுறையில், பூம்புகார் தொகுதியில் புயல்- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்.எல்.ஏ பவுன்ராஜ் பார்வையிட்டார்


மயிலாடுதுறை குத்தாலம் ஒன்றியம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் பார்வையிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவரணம் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவுவிட்டார். பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது சென்னிய நல்லூர் ஊராட்சி பகுதியில் பார்வையிட்டபோது சென்னிய நல்லூர் தி.மு.க ஊராட்சி மன்ற 6 வது வார்டு உறுப்பினர் புனிதா ராஜா தன்னை பூம்புகார் எம்.எல்.ஏ பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியின் பொது குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் மணி, சென்னிய நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி ராஜசேகரன், ஒன்றிய குழு உறுப்பினர் நசீர் அகமது மற்றும் பலர் உடன் இருந்தனர்.