மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு சீரமைப்பு பணி தீவிரம் நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு

மயிலாடுதுறை நகரில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் மற்றும் ஆள்நுழைவு தொட்டிகள் அடிக்கடி உடைந்து சாலைகள் உள்வாங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 5-ந் தேதி மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை கொத்ததெருவில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டி உடைந்து 15 அடி ஆழத்திற்கு மேல் சாலை உள்வாங்கியது. இதனால் தரங்கம்பாடி சாலை போக்குவரத்துகள், தருமபுரம் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. தற்போது கொத்தத்தெருவில் சாலை உள்வாங்கிய பகுதியில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணியை நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதாள சாக்கடை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். மேலும் அடிக்கடி பாதாள சாக்கடை குழாய்கள் உடைவதால் கழிவு நீரேற்றம் தடைபடுகிறது.

இதற்கு நிரந்தர தீர்வாக 2 கி.மீ. தூரம் சாலையின் ஓரத்தில் புதிய குழாய் பதிப்பதற்கு ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அப்போது அவருடன் நகராட்சி நிர்வாக கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன், நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் சரவணன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உமா மகேஸ்வரி, மண்டல பொறியாளர் பார்த்திபன், நகராட்சி ஆணையர் சுப்பையா, நகராட்சி பொறியாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

SOURCE

More News

திமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..! மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

admin See author's posts

‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…!…

admin See author's posts

தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்

admin See author's posts

Google Pay, Phonepeக்கு செக்.! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.

admin See author's posts

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

admin See author's posts

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

admin See author's posts

வாக்காளர் அட்டை இல்லையா? இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்!

admin See author's posts

பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு..! கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்

admin See author's posts