மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம், செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து விவசாயிகள் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கைகளை எடுத்து கூறினர். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது: நடப்பு ஆண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜீன் 12-ஆம் தேதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் தண்ணீர் திறந்துவிடப்பட்டு அதனைத்தொடர்ந்து டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக குறுவை தொகுப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 2020-21 ஆண்டில் குறுவை நெல் சாகுபடி செய்திட 96,750 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 92,427 ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையொட்டி 1 லட்சம் ஏக்கர் வரை குறுவை சாகுபடி பரப்பு எதிர்பார்க்கப்படுகிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் 50 சதவீத மானியத்தில் நெல் விதைகளும், 100 சதவீத மானியத்தில் உரங்கள் மற்றும் பசுந்தாள் உர விதைகளும், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கிடவும், பண்ணைக்குட்டை அமைத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. உரங்களைப் பொறுத்தமட்டில் ஏக்கருக்கு இரண்டு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டிஏபி, அரை மூட்டை பொட்டாஷ் ஆகியவை 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். ஒரு விவசாயி அதிகபட்சமாக இரண்டு ஏக்கருக்கு மட்டுமே பயனடைய இயலும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை அலுவலர்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோரிடத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும். அதேபோல் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் அல்லது தனியார் விதை விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். தனியார் விதை விற்பனை நிலையத்தில் பசுந்தாள் விதை வாங்கிய விவசாயிகள் அதற்கான பட்டியலை வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஒப்படைத்தால் அதற்குரிய தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வேளாண்மை பொறியியல் துறை மூலம் நெல் நடவு இயந்திரம், களை எடுக்கும் கருவி, வைக்கோல் கட்டும் கருவி, நெல் அறுவடை இயந்திரம் ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகிறது.

பண்ணைக்குட்டை அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களை பெற்று பயனடைய வேளாண்மை பொறியில் துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பெற்று சமர்ப்பிக்கவும். மேலும் விபரங்கள் அறிய வேளாண் பொறியியல்துறை உதவி இயக்குநர் – 9443277456 கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். 2021-22 ஆம் ஆண்டில் பல்வேறு பயிர்களில் சொட்டுநீர் பாசனமும், இதர பயிர்களில் தெளிப்பு நீர் பாசனமும் மேற்கொள்ள 400 ஹெக்டேர் பொருள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மை உதவி அலுவலர்கள் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி உரிய ஆவணங்களை வழங்கி தங்களது பெயரை முன்கூட்டியெ பதிவு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் குறுவை தொகுப்பு திட்டம் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குநர் -9443231215இ குத்தாலம் வேளாண்மை உதவி இயக்குநர் – 9894548257இ செம்பனார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர்- 9487324075இ சீர்காழி வேளாண்மை உதவி இயக்குநர்- 9843319069இ கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குநர்- 9442779703 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். எனவே இக்குறுவை சாகுபடியை பொறுத்தவரையில் தேவைகேற்ப உரங்கள் கையிருப்பு உள்ளது. தமிழக அரசின் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்று விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அவர்கள் தெரிவித்தார். இகூட்டத்தின்போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) பன்னீர்செல்வம், வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் பழனிசாமி, உதவி இயக்குநர் சங்கரநாராயணன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page