25th November 2020

மயிலாடுதுறையில் திருநங்கைகளுக்கு விருது மற்றும் பாராட்டு விழா

மயிலாடுதுறையில் ஓய்வூதியர் சங்கக் கட்டிடத்தில் கலைத்தாய் அறக்கட்டளை சார்பாக சாதனை படைத்த திருநங்கைகளுக்கு விருது வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் கிங் பைசல் தலைமை வகித்து ஏன் இந்த விழா எடுக்கப்பட்டது என்பது குறித்து பேசினார், முன்னதாக காவிரி கிராம மேம்பாட்டு அமைப்பு செயலாளர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார், நாகை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்க தலைவர் ரவிச்சந்திரன், நாகை மாவட்ட நாடக நடிகர் சங்க பொருளாளர் தனபால், கும்பகோணம் நாடக நடிகர் சங்க தலைவர் திருஞானம், மேஜிக் கலைஞர் மகாதேவன் மற்றும் கலைஞர் அச்சக உரிமையாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சீர்காழி வட்டாட்சியர் விஜயராகவன், மாநில நாட்டுப்புற நல வாரியம் தலைவர் தங்கவேல், திண்டுக்கல் துரைசந்தோஷ் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருநங்கைகளுக்கு விருது வழங்கி பாராட்டு சான்றிதழ்களை கனவு ஆசிரியர் கவிஞர் வீதி முதுகணியன் வழங்கி உற்சாக பேருரை வழங்கினார். அவர் பேசுகையில் ‘தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே கூட இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெற்றது கிடையாது மூன்றாவது பாலினத்தை மதிப்பு கொடுக்காத சமூகத்தில், அவர்களிள் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தி மனிதரில் புனிதராக கிங்பைசல் திகழ்கிறார்’ என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் அப்பர் சுந்தரம், ஆடுதுறை ரேணுகா, கோரக்கர் சுவாமி, மங்கநல்லூர் கே..எஸ்.ஓ பண்ணை இராதாகிருஷ்ணன், காவிரி அமைப்பு பொருளாளர் அகஸ்டின் விஜய், காவிரி அமைப்பு செயலாளர் சிவகுமார், ஆயி மகமாயி அறக்கட்டளை மதிச்செல்வம் உள்ளிட்டவர்கள் வாழ்த்தி பேசினார்கள். நிறைவாக அறக்கட்டளை பொருளாளர் ஹாபிப் நிஷா நன்றி கூறினார்.

செய்தி : குணசீலன் / படங்கள் : யோகுதாஸ்

Leave a Reply