மயிலாடுதுறையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மயிலாடுதுறை காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணியாக நடைபெற்றது.
இந்த பேரணிக்கு காவல் துணை கண்காணிப்பாளர் டி எஸ் பி அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. மேலும் கால்டாக்ஸ் பகுதியில் தொடங்கிய இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகளில் ஒன்றான மணிக்கூண்டு வழியாக சென்று கேணிக்கரையில் இறுதியாக முடிவடைந்தது. இந்த காவல் அணிவகுப்பில் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் உதவி காவல் ஆய்வாளர் , சிறப்பு காவல் ஆய்வாளர்கள் , அதிரடி படை போலீசார் என 158 காவல் துறையினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.