மயிலாடுதுறையில் டிக் டாக் மீராவுக்காக காதலுடன் காத்திருக்கும் அந்த 5 மாப்பிள்ளைகள்..! பணத்தை பறிகொடுத்து தவிப்பு

மயிலாடுதுறையில் டிக்டாக் காதலியை நம்பி 3 லட்சம் ரூபாயுடன், தனது வாழ்க்கையையும் பறிகொடுத்து விட்டதாக இளைஞர் ஒருவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். தீராத் துயரமாக தொடர்ந்து வரும் டிக்டாக்கில், 40 வயது மீராவின் காதல் வலையில் சிக்கி காயம்பட்ட அந்த 5 மாப்பிள்ளைகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

டிக்டாக்கில் 4 இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களைத் திருமணம் செய்து ஏமாற்றியதோடு 5 வதாக பார்த்திபனுடன் கனவு காணும் 40 வயதான மீரா என்கிற ரஜபுன்னிஷா இவர்தான்..!

முகநூலில் அறிமுகமான மீராவை, டிக்டாக் வீடியோவில் க்ளோசப்பில் பார்த்து சொக்கிப்போன ஓட்டுனர் பாலகுரு என்பவர் தன் காதலை வெளிப்படுத்த, தன்னை குறிப்பிட்ட சாதிப்பொண்ணு என்று கூறி பாலகுருவுக்கு டிக் அடித்த மீரா, அவரை காதல் வலையில் வீழ்த்தி திருமணமும் செய்து கொண்டுள்ளார்

திருமணம் முடிந்த சில நாட்களில் அவரது உண்மையான பெயர் ரஜபுன்னிஷா என்றும் வேற்று மதத்தை சேர்ந்த அவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும் பாலகுருவுக்கு தெரியவந்துள்ளது. இருந்தாலும் மீரா மீது கொண்ட காதலால் தொடர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் பாலகுரு . இந்த நிலையில் அவர் ஓட்டுனர் பணிக்கு சென்ற பின்னர் மீராவை சந்திக்க வேறு சில ஆண்கள் தனது வீட்டுக்கு வந்து செல்வதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் பாலகுரு.

இது குறித்து விசாரித்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீரா, அவரது வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தால் மீராகுறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து கழற்றிவிட்ட மீரா, 4 வதாக பாலகுருவை திருமணம் செய்ததும், அவரிடம் இருந்தும் பணத்தை எடுத்துக் கொண்டு 5 வதாக திண்டுக்கல்லை சேர்ந்த பார்த்திபன் என்பவருடன் சென்று விட்டதும் தெரியவந்துள்ளது.

உடனடியாக மீராவின் தாயை தொடர்பு கொண்டு, மீராவுக்கு பல ஆண்களுடன் பழக்கம் இருப்பதாக பாலகுரு ஆவேசமாக கூறிய நிலையில் அவரது தாய் அளித்த பதிலால் மிரண்டு போனார் பாலகுரு..!

இதையடுத்து தனது உறவினர்கள் புடை சூழ மாயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்ற பாலகுரு, தன்னை ஏமாற்றி ஒரு பவுன் நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாயை எடுத்துச்சென்று விட்டதாகவும் மொத்தமாக 3 லட்சம் ரூபாயையும் தனது வாழ்க்கையையும் இழந்து தவிப்பதாக மீரா மீது புகார் அளித்தார் பாலகுரு.

டிக்டாக் மற்றும் முக நூலில் தனது வீடியோக்களை பதிவிட்ட மீரா, அதில் கமெண்ட் பதியும் நபர்களின் தீவிரத்தை பார்த்து காதலர்களை தேர்வு செய்துள்ளார் என்று பாலகுரு கூறும் நிலையில், பெரிய கருவாடுக்கு ஆசைப்பட்டு பொறியில் சிக்கிய பெருச்சாளி போல மீராவிடம் சிக்கிய 4 மாப்பிள்ளைகள் கோபத்தில் காத்திருக்க, 5 வது மாப்பிள்ளை பார்த்திபனோ மீராவிடம் அடுத்ததாக ஏமாறுவதற்கு காத்திருப்பதாக வேதனை தெரிவிக்கின்றார் பாலகுரு

சீனாவின் டிக்டாக் தடை செய்யப்பட்டு விட்டாலும், டிக்டாக்கின் பாதிப்பு கொரோனா போல பலரையும் தொடர்ந்து வருவதுதான் சோகம்..!

 

Source: Polimer News

More News

கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை…!

admin See author's posts

HAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்!

admin See author's posts

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts