26th October 2021

மயிலாடுதுறையில் அலுமினிய கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு!

மயிலாடுதுறை பகுதியில் கண்ணாரத் தெருவில் வசித்து வருபவர் பழனிவேல் (வயது55). இவர் அதே பகுதியில் அலுமினிய இன்டீரியர் டெக்கரேஷன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் முதல் மாடியில் பழனிவேல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை 6 மணியளவில் அவர் கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பழனிவேல் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில் மயிலாடுதுறை உதவி போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் பல போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் மொபட்டில் வந்த மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடி விட்டு மீண்டும் மொபட்டில் அங்கிருந்து தப்பி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page